பாடல் 40 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 40 · நெய்தல் · குன்றியனார்

கானல் மாலைக் கழிப்பூக் கூம்பநீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்பமீனார் குருகின் மென்பறைத் தொழுதிகுவையிரும் புன்னைக் குடம்பை சேரவசைவண் டார்க்கு மல்குறு காலைத்தாழை தளரத் தூங்கி மாலையழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்காமர் நெஞ்சங் கையறு பினையத்துயரஞ் செய்துநம் மருளா ராயினுமறாஅ லியரோ வவருடைக் கேண்மையளியின் மையி னவணுறை முனைஇவாரற்க தில்ல தோழி கழனிவெண்ணெ லரிநர் பின்றைத் ததும்புந்தண்ணுமை வெரீஇய தடந்தா ணாரைசெறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணையகமடற் சேக்குந் துறைவனின்றுயின் மார்பிற் சென்றவென் னெஞ்சே.

Kaanal maalaik kazhippook koompa / Neenirap perungkatal paatezhun tholippa / Meenaar kurukin menparaith thozhuthi / Kuvaiyirum punnaik kutampai saera / Vasaivan taarkku malkuru kaalaith / Thaazhai thalarath thoongki maalai / Yazhithaka vantha kontalotu kazhipatark / Kaamar nenjang kaiyaru pinaiyath / Thuyaranj seythunam marulaa raayinu / Maraaa liyaroa vavarutaik kaenmai / Yaliyin maiyi navanurai munaii / Vaararka thilla thoazhi kazhani / Venne larinar pinraith thathumpun / Thannumai vereeiya thatanthaa naarai / Serimatai vayirir pilirrip pennai / Yakamatar saekkun thuraiva / Ninruyin maarpir senraven nenjae.

பகிர்
கதை

நெய்தல் · குன்றியனார்

தலைமகன் பொருள்வயிற் பிரிந்துழிக் கிழத்தி தோழிக்குச் சொல்லியது. · குன்றியனார் பாடியது