பாடல் 45 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 45 · பாலை · வெள்ளிவீதியார்

வாட லுழுஞ்சில் விளைநெற் றந்துணராடுகளப் பறையி னரிப்பன வொலிப்பக்கோடை நீடிய வகன்பெருங் குன்றத்துநீரிலா ராற்று நிவப்பன களிறட்டாளி லத்தத் துழுவை யுகளுங்காடிறந் தனரே காதலர் மாமையரிநுண் பசலை பாஅய்ப் பீரத்தெழின்மலர் புரைதல் வேண்டு மலரேயன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்றொன்னிலை முழுமுத றுமியப் பண்ணிப்புன்னை குறைத்த ஞான்றை வயிரியரின்னிசை யார்ப்பினும் பெரிதே யானேகாதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்தாதி மந்தி போலப் பேதுற்றலந்தனெ னுழல்வென் கொல்லோ பொலநதார்க்கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்வான வரம்ப னடன்முனைக் கலங்கியவுடைமதி லோரரண் போலவஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே.

Vaata luzhunjil vilainer ranthuna / Raatukalap paraiyi narippana volippak / Koatai neetiya vakanperung kunraththu / Neerilaa raarru nivappana kalirat / Taali laththath thuzhuvai yukalung / Kaatiran thanarae kaathalar maamai / Yarinun pasalai paaayp peerath / Thezhinmalar puraithal vaentu malarae / Yanni kurukkaip paranthalaith thithiyan / Ronnilai muzhumutha rumiyap pannip / Punnai kuraiththa njaanrai vayiriya / Rinnisai yaarppinum perithae yaanae / Kaathalar ketuththa sirumaiyotu noaykoorn / Thaathi manthi poalap paethur / Ralanthane nuzhalven kolloa polanathaark / Katalkaal kilarntha venri nalvael / Vaana varampa natanmunaik kalangkiya / Vutaimathi loararan poala / Vanjuvaru noayotu thunjaa thaenae.

பகிர்
கதை

பாலை · வெள்ளிவீதியார்

வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. · வெள்ளிவீதியார் பாடியது