பாலை · வண்ணப்புறக் கந்தரத்தனார்
உடன் போயின தலைமகளை நினைந்து செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது. · வண்ணப்புறக் கந்தரத்தனார் பாடியது
கிளியும் பந்துங் கழங்கும் வெய்யோளளியு மன்புஞ் சாயலு மியல்புமுன்னாட் போலா ளிறீஇயரென் னுயிரெனக்கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத் தியாத்தகடுங்கட் கறவையிற் சிறுபுற நோக்கிக்குறுக வந்து குவவுநுத னீவிமெல்லெனத் தழீஇயினே னாக வென்மகணன்ன ராகத் திடைமுலை வியர்ப்பப்பல்கான் முயங்கினண் மன்னே யன்னோவிறன்மிகு நெடுந்தகை பலபா ராட்டிவறனிழ லசைஇ வான்புலந்து வருந்தியமடமா னசாவினந் திரங்குமரல் சுவைக்குங்காடுடன் கழித லறியிற் றந்தையல்குபத மிகுத்த கலியுடை வியனகர்ச்செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழற் போலக்கோதை யாயமொ டோரை தழீஇத்தோடமை யரிச்சிலம் பொலிப்பவவளாடுவழி யாடுவழி யகலேன் மன்னே.
உடன் போயின தலைமகளை நினைந்து செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது. · வண்ணப்புறக் கந்தரத்தனார் பாடியது