பாடல் 54 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 54 · முல்லை · மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்

விருந்தின் மன்னர் அருங்கலந் தெறுப்பவேந்தனும் வெம்பகை தணிந்தனன் தீம்பெயற்காரும் ஆர்கலி தலையின்று தேரும்ஓவத் தன்ன கோபச் செந்நிலம்வள்வாய் ஆழி உள்ளுறு புருளக்கடவுக காண்குவம் பாக மதவுநடைத்தாம்பசை குழவி வீங்குசுரை மடியக்கனையலங் குரல பாற்பரி பயிற்றிப்படுமணி மிடற்ற பயநிரை யாயம்கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர்கொன்றையங் குழலர் பின்றைத் தூங்கமனைமனைப் படரும் நனைநகு மாலைத்தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப்புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்நீர்குடி சுவையில் தீவிய மிழற்றிமுகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்பொன்னுடைத் தாலி யென்மகன் ஒற்றிவருகுவை யாயின் தருகுவென் பாலெனவிலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித்திதலை யல்குலெங் காதலிபுதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.
பகிர்
கதை

முல்லை · மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்

வினைமுடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. · மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் பாடியது