பாடல் 58 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 58 · குறிஞ்சி · மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்

இன்னிசை உருமொடு கனைதுளி தலைஇமன்னுயிர் மடிந்த பானாட் கங்குல்காடுதேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅதுவரியதள் படுத்த சேக்கைத் தெரியிழைத்தேனாறு கதுப்பிற் கொடிச்சியர் தந்தைகூதரிற் செறியுங் குன்ற நாடவனைந்துவரல் இளமுலை ஞெமுங்கப் பல்லூழ்விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்றநின்மார் படைதலின் இனிதா கின்றேநும்மில் புலம்பினும் உள்ளுதொறு நலியும்தண்வரல் அசைஇய பண்பில் வாடைபதம்பெறு கல்லா திடம்பார்த்து நீடிமனைமரம் ஒசிய ஒற்றிப்பலர்மடி கங்குல் நெடும்புற நிலையே.
பகிர்
கதை

குறிஞ்சி · மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்

சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. · மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் பாடியது