பாலை · கருவூர்க் கண்ணம் புல்லனார்
தலைமகள் புணர்ந்துடன் செல்லச் செவிலி தன் மகளுக்குச் சொல்லியது. · கருவூர்க் கண்ணம் புல்லனார் பாடியது
கேளாய் வாழியோ மகளைநின் தோழிதிருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடுபெருமலை இறந்தது நோவேன் நோவல்கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்திமுடங்குதாள் உதைத்த பொலங்கெழு பூழிபெரும்புலர் விடியல் விரிந்துவெயில் எறிப்பக்கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல்சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண்அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்கன்றுகா ணாதுபுன் கண்ண செவிசாய்த்துமன்றுநிறை பைதல் கூரப் பலவுடன்கறவை தந்த கடுங்கால் மறவர்கல்லென் சீறூர் எல்லியின் அசைஇமுதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பைமடமயில் அன்னஎன் நடைமெலி பேதைதோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள்வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்சேக்கோள் அறையுந் தண்ணுமைகேட்குநள் கொல்லெனக் கலுழுமென் நெஞ்சே.
Kaelaay vaazhiyoa makalainin thoazhi / Thirunakar varaippakam pulampa avanotu / Perumalai iranthathu noavaen noaval / Katungkan yaanai netungkai saerththi / Mutangkuthaal uthaiththa polangkezhu poozhi / Perumpular vitiyal virinthuveyil erippak / Karunthaar mitarra sempoozhs saeval / Sirupun petaiyotu kutaiyum aangkan / Anjuvarath thakuna kaanam neenthik / Kanrukaa naathupun kanna sevisaayththu / Manrunirai paithal koorap palavutan / Karavai thantha katungkaal maravar / Kallen seeroor elliyin asaii / Muthuvaayp pentin sethukaal kurampai / Matamayil annaen nataimeli paethai / Thoalthunai yaakath thuyirrath thunjaal / Vaettak kalvar visiyuru katungkan / Saekkoal araiyun thannumai / Kaetkunal kollenak kaluzhumen nenjae.
தலைமகள் புணர்ந்துடன் செல்லச் செவிலி தன் மகளுக்குச் சொல்லியது. · கருவூர்க் கண்ணம் புல்லனார் பாடியது