பாடல் 65 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 65 · பாலை · மாமூலனார்

அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்ஈரஞ் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்சேரியம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற்பொம்மல் ஓதி நம்மோ டொராங்குச்செலவயர்ந் தனரால் இன்றே மலைதொறும்மால்கழை பிசைந்த கால்வாய் கூரெரிமீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர்வான்தோய் புணரி மிசைக்கண் டாங்குமேவரத் தோன்றும் யாஅஉயர் நனந்தலைகல்லூர் பிழிதரும் புல்சாய் சிறுநெறிக்காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல்ஆறுகடி கொள்ளும் அருஞ்சுரம் பணைத்தோள்நாறைங் கூந்தற் கொம்மை வரிமுலைநிரையிதழ் உண்கண் மகளிர்க்குஅரிய வாலென அழுங்கிய செலவே

Annai sollum uykam ennathooum / Eeranj saeraa iyalpin poymmozhis / Saeriyam pentir kauvaiyum ozhikam / Naatukan akarriya uthiyanj saerar / Pommal oathi nammoa toraangkus / Selavayarn thanaraal inrae malaithorum / Maalkazhai pisaintha kaalvaay kooreri / Meenkol parathavar kotunthimil nalisutar / Vaanthoay punari misaikkan taangku / Maevarath thoanrum yaaauyar nananthalai / Kalloor pizhitharum pulsaay sirunerik / Kaatumeek koorung koataen thoruththal / Aarukati kollum arunjuram panaiththoal / Naaraing koonthar kommai varimulai / Niraiyithazh unkan makalirkku / Ariya vaalena azhungkiya selavae

பகிர்
கதை

பாலை · மாமூலனார்

வேறுபட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. · மாமூலனார் பாடியது