முல்லை · ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்
வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. · ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் பாடியது
களையும் இடனால் பாக உளைஅணிவகையமை வனப்பின் வள்புநீ தெரியத்தளவுப்பிணி அவிழ்ந்த தண்பதப் பெருவழிஐதிலங் ககலிலை நெய்கனி நோன்காழ்வென்வேல் இளையர் வீங்குபரி முடுகச்செலவுநாம் அயர்ந்தன மாயின் பெயலகடுநீர் வரித்த செந்நில மருங்கின்விடுநெறி ஈர்மணல் வாரணஞ் சிதரப்மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறுஊர்வயிற் பெயரும் பொழுதில் சேர்புடன்கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரும்ஆபூண் தெண்மணி ஐதியம் பின்னிசைபுலம்புகொள் மாலை கேட்டொறுங்கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.
Kalaiyum itanaal paaka ulaiani / Vakaiyamai vanappin valpunee theriyath / Thalavuppini avizhntha thanpathap peruvazhi / Aithilang kakalilai neykani noankaazh / Venvael ilaiyar veengkupari mutukas / Selavunaam ayarnthana maayin peyala / Katuneer variththa sennila marungkin / Vituneri eermanal vaarananj sitharap / Mannutaik koatta annal aeeru / Oorvayir peyarum pozhuthil saerputan / Kanrupayir kurala manrunirai pukutharum / Aapoon thenmani aithiyam pinnisai / Pulampukol maalai kaettorung / Kalangkinal uraivoal kaiyaru nilaiyae.
வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. · ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் பாடியது