பாலை · பெருந்தேவனார்
பொருள்வயிற் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. · பெருந்தேவனார் பாடியது
ஆள்வழக் கற்ற சுரத்திடைக் கதிர்தெறநீளெரி பரந்த நெடுந்தா ளியாத்துப்போழ்வளி முழங்கும் புல்லென் உயர்சினைமுடைநசை இருக்கைப் பெடைமுகம் நோக்கிஊன்பதித் தன்ன வெருவரு செஞ்செவிஎருவைச் சேவல் கரிபுசிறை தீயவேனில் நீடிய வேயுயர் நனந்தலைநீயுழந் தெய்துஞ் செய்வினைப் பொருட்பிணிபல்லிதழ் மழைக்கண் மாஅ யோளவயிற்பிரியிற் புணர்வ தாயிற் பிரியாது.ஏந்துமுலை முற்றம் வீங்கப் பல்லூழ்சேயிழை தெளிர்ப்பக் கவைஇ நாளும்மனைமுதல் வினையொடும் உவப்பநினைமாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே.
Aalvazhak karra suraththitaik kathirthera / Neeleri parantha netunthaa liyaaththup / Poazhvali muzhangkum pullen uyarsinai / Mutainasai irukkaip petaimukam noakki / Oonpathith thanna veruvaru senjevi / Eruvais saeval karipusirai theeya / Vaenil neetiya vaeyuyar nananthalai / Neeyuzhan theythunj seyvinaip porutpini / Pallithazh mazhaikkan maaa yoalavayir / Piriyir punarva thaayir piriyaathu. / Aenthumulai murram veengkap palloozh / Saeyizhai thelirppak kavaii naalum / Manaimuthal vinaiyotum uvappa / Ninaimaan nenjam neengkuthal maranthae.
பொருள்வயிற் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. · பெருந்தேவனார் பாடியது