பாடல் 113 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 113 · பறம்பு கண்டு புலம்பல் · கபிலர்

மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி,நட்டனை மன்னோ, முன்னே; இனியே,பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று,நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்சேறும் - வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே!கோல் திரள் முன்கைக் குறுந் தொடி மகளிர்நாறு இருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.

Mattu vaay thirappavum, mai vitai veezhppavum, / Attu aanru aanaak kozhun thuvai oon soarum / Pettaangku eeyum peruvalam pazhuni, / Nattanai mannoa, munnae; iniyae, / Paari maaynthenak, kalangkik kaiyarru, / Neer vaar kannaem thozhuthu nir pazhissis / Saerum - vaazhiyoa perumpeyarp parampae! / Koal thiral munkaik kurun thoti makalir / Naaru irung koonthar kizhavaraip patarnthae.

பகிர்
கதை

பறம்பு கண்டு புலம்பல் · கபிலர்

திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை. சிறப்பு : நட்புக் கெழுமிய புலவரின் உள்ளம்