தோற்பது நும் குடியே · கோவூர் கிழார்
திணை: வஞ்சி · துறை: துணை வஞ்சி · பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் · குறிப்பு: முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய செய்யுள் இது
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடுபொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்நும்மோர் அன்ன வேந்தர்க்குமெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!
திணை: வஞ்சி · துறை: துணை வஞ்சி · பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் · குறிப்பு: முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய செய்யுள் இது