பாடல் 46 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 46 · அருளும் பகையும் · கோவூர் கிழார்

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்,தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்!களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்தபுன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி,விருந்திற் புன்கண்நோ வுடையர்;கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே!
பகிர்
கதை

அருளும் பகையும் · கோவூர் கிழார்

திணை: வஞ்சி · துறை: துணை வஞ்சி · பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் · குறிப்பு: மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது