பாடல் 224 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 224 · முல்லை · 1 ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்

செல்க பாக எல்லின்று பொழுதேவல்லோன் அடங்குகயி றமைப்பக் கொல்லன்விசைத்துவாங்கு துருத்தியின் வெய்ய உயிராக்கொடுநுகத் தியாத்த தலைய கடுநடைக்காற்கடுப் பன்ன கடுஞ்செலல் இவுளிவால்வெண் தெவிட்டல் வழிவார் நுணக்கஞ்சிலம்பி நூலின் உணங்குவன பாறிச்சாந்துபுலர் அகலம் மறுப்பக் காண்டகப்புதுநலம் பெற்ற வெய்தநீங்கு புறவில்தெறிநடை மரைக்கணம் இரிய மனையோள்ஐதுணங்கு வல்சி பெய்துமுறுக் குறுத்ததிரிமரக் குரலிசை கடுப்ப வரிமணல்அலங்குகதிர்த் திகிரி ஆழி போழவருங்கொல் தோழிநம் இன்னுயிர்த் துணையெனச்சில்கோல் எல்வளை யொடுக்கிப் பல்கால்அருங்கடி வியனகர் நோக்கிவருந்துமால் அளியள் திருந்திழை தானே.

Selka paaka ellinru pozhuthae / Valloan atangkukayi ramaippak kollan / Visaiththuvaangku thuruththiyin veyya uyiraak / Kotunukath thiyaaththa thalaiya katunataik / Kaarkatup panna katunjelal ivuli / Vaalven thevittal vazhivaar nunakkanj / Silampi noolin unangkuvana paaris / Saanthupular akalam maruppak kaantakap / Puthunalam perra veythaneengku puravil / Therinatai maraikkanam iriya manaiyoal / Aithunangku valsi peythumuruk kuruththa / Thirimarak kuralisai katuppa varimanal / Alangkukathirth thikiri aazhi poazha / Varungkol thoazhinam innuyirth thunaiyenas / Silkoal elvalai yotukkip palkaal / Arungkati viyanakar noakki / Varunthumaal aliyal thirunthizhai thaanae.

பகிர்
கதை

முல்லை · 1 ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்

வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. · 1 ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் பாடியது