பாடல் 315 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 315 · பாலை · குடவாயிற் கீரத்தனார்

கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும்சூழி மென்முகஞ் செப்புடன் எதிரினபெண்டுணை சான்றனள் இவளெனப் பன்மாண்கண்டுணை யாக நோக்கி நெருநையும்அயிர்த்தன்று மன்னே நெஞ்சம் பெயர்த்தும்அறியா மையிற் செறியோன் யானேபெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன்அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்சேணுறச் சென்று வறுஞ்சுனைக் கொல்கிப்புறவுக்குயின் றுண்ட புன்காய் நெல்லிக்கோடை யுதிர்ந்த குவிகட் பசுங்காய்அறுநூற் பளிங்கின் துளைக்காசு கடுப்பவறுநிலத் துதிரும் அத்தம் கதுமெனக்கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச்சேக்குவள் கொல்லோ தானே தேக்கின்அகலிலை 2குவித்த புதல்போல் குரம்பைஊன்புழுக் கயரும் முன்றிற்கான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே.
பகிர்
கதை

பாலை · குடவாயிற் கீரத்தனார்

மகட்போக்கிய தாய் சொல்லியது · குடவாயிற் கீரத்தனார் பாடியது