பழநி
பழநி · ராகம் சுப பந்துவராளி · தாளம் மிஸ்ரசாபு (3 1/2)
தான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தன ...... தனதானமூல மந்திர மோத லிங்கிலையீவ திங்கிலை நேய மிங்கிலைமோன மிங்கிலை ஞான மிங்கிலை ...... மடவார்கள்மோக முண்டதி தாக முண்டபசார முண்டப ராத முண்டிடுமூக னென்றொரு பேரு முண்டருள் ...... பயிலாதகோல முங்குண வீன துன்பர்கள்வார்மை யும்பல வாகி வெந்தெழுகோர கும்பியி லேவி ழுந்திட ...... நினைவாகிக்கூடு கொண்டுழல் வேனை யன்பொடுஞான நெஞ்சினர் பாலி ணங்கிடுகூர்மை தந்தினி யாள வந்தருள் ...... புரிவாயேபீலி வெந்துய ராலி வெந்தவசோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடைபீதி கொண்டிட வாது கொண்டரு ...... ளெழுதேடுபேணி யங்கெதி ராறு சென்றிடமாற னும்பிணி தீர வஞ்சகர்பீறு வெங்கழு வேற வேன்றிடு ...... முருகோனேஆல முண்டவர் சோதி யங்கணர்பாக மொன்றிய வாலை யந்தரிஆதி யந்தமு மான சங்கரி ...... குமரேசாஆர ணம்பயில் ஞான புங்கவசேவ லங்கொடி யான பைங்கரஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் ...... பெருமாளே.
பழநி · ராகம் சுப பந்துவராளி · தாளம் மிஸ்ரசாபு (3 1/2)
Palani · ragam சுப பந்துவராளி · thalam மிஸ்ரசாபு (3 1/2)