புலவரும் பொதுநோக்கமும் · கபிலர்
திணை: பொதுவியல் · துறை: பொருண் மொழிக் காஞ்சி · பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி
ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப்பலரும் வருவர், பரிசில் மாக்கள்;வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்ஈதல் எளிதே, மாவண் தோன்றல்;அது நற்கு அறிந்தனை யாயின்,பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!
Oru thisai oruvanai ulli, naarrisaip / Palarum varuvar, parisil maakkal; / Varisai arithaloa arithae; perithum / Eethal elithae, maavan thoanral; / Athu narku arinthanai yaayin, / Pothu noakku ozhimathi, pulavar maattae!
திணை: பொதுவியல் · துறை: பொருண் மொழிக் காஞ்சி · பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி