குறிஞ்சி · ---- வடமவண்ணக்கன் பேரிசாத்தனார்
குறைவேண்டிப் பின்னின்ற தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது. · ---- வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் பாடியது
அறியாய் வாழி தோழி பொறிவரிப்பூநுதல் யானையொடு புலிபொரக் குழைந்தகுருதிச் செங்களம் புலவற வேங்கைமாமலை நாடனொடு மறுவின் றாகியகாமங் கலந்த காதல் உண்டெனின்நன்றுமன் னதுநீ நாடாய் கூறுதிநாணும் நட்பும் இல்லோர்த் தேரின்யானல தில்லையிவ் வுலகத் தானேஇன்னுயிர் அன்ன நின்னொடுஞ் சூழாதுமுளையணி மூங்கிலிற் கிளையொடு பொலிந்தபெரும்பெயர் எந்தை அருங்கடி நீவிச்செய்துபின் இரங்கா வினையொடுமெய்யல பெரும்பழி எய்தி னேனே.
குறைவேண்டிப் பின்னின்ற தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது. · ---- வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் பாடியது