பாலை · - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
1செலவுணர்த்திய தோழி தலைமகளது குறிப்பறிந்து தலைமகனைச் செலவழுங்கச் சொல்லியது. · - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் பாடியது
பொறிவரிப் புறவின் செங்கால் சேவல்சிறுபுன் பெடையொடு சேட்புலம் போகிஅரிமணல் இயவிற் பரல்தேர்ந் துண்டுவரிமரல் வாடிய வான்நீங்கு நனந்தலைக்குறும்பொறை மருங்கிற் கோட்சுரம் நீந்திநெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப்பல்காய் அஞ்சினை யகவும் அத்தம்சென்றுநீர் அவணி ராகி நின்றுதரும்நிலையரும் பொருட்பிணி நினைந்தனி ரெனினேவல்வ தாகநுஞ் செய்வினை யிவட்கேகளிமலி கள்ளில் நற்றே 3ரவியன்ஆடியல் இளமழை சூடித் தோன்றும்பழந்தூங்கு விடரகத் தெழுந்த காம்பின்கண்ணிடை புரையும் நெடுமென் பணைத்தோள்திருந்துகோ லாய்தொடி ஞெகிழின்மருந்து முண்டோ பிரிந்துறை நாட்டே.
Porivarip puravin sengkaal saeval / Sirupun petaiyotu saetpulam poaki / Arimanal iyavir paralthaern thuntu / Varimaral vaatiya vaanneengku nananthalaik / Kurumporai marungkir koatsuram neenthi / Netunjaen vantha neernasai vampalar / Selluyir niruththa suvaikkaay nellip / Palkaay anjinai yakavum aththam / Senruneer avani raaki ninrutharum / Nilaiyarum porutpini ninainthani reninae / Valva thaakanunj seyvinai yivatkae / Kalimali kallil narrae 3raviyan / Aatiyal ilamazhai sootith thoanrum / Pazhanthoongku vitarakath thezhuntha kaampin / Kannitai puraiyum netumen panaiththoal / Thirunthukoa laaythoti njekizhin / Marunthu muntoa pirinthurai naattae.
1செலவுணர்த்திய தோழி தலைமகளது குறிப்பறிந்து தலைமகனைச் செலவழுங்கச் சொல்லியது. · - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் பாடியது