பாடல் 85 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 85 · பாலை · காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்

நன்னுதல் பசப்பவும் பெருந்தோள் நெகிழவும்இன்னம் ஆகவும் இங்குநத் துறந்தோர்அறவர் அல்லர் அவரெனப் பலபுலந்துஆழல் வாழி தோழி சாரல்ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடிகன்று பசி களைஇய பைங்கண் யானைமுற்றா மூங்கில் முளைதரு பூட்டும்வென்வேல் திரையன் வேங்கட நெடுவரைநன்னாட் பூத்த நாகிள வேங்கைநறுவீ யாடிய பொறிவரி மஞ்ஞைநணைப்பசுங் குருந்தின் நாறுசினை யிருந்துதுணைப்பயிர்ந் தகவுந் துனைதரு தண்கார்வருதும் யாமெனத் தேற்றியபருவங் காணாது பாயின்றால் மழையே.

Nannuthal pasappavum perunthoal nekizhavum / Innam aakavum ingkunath thuranthoar / Aravar allar avarenap palapulanthu / Aazhal vaazhi thoazhi saaral / Eenrunaal ulantha mennatai matappiti / Kanru pasi kalaiiya paingkan yaanai / Murraa moongkil mulaitharu poottum / Venvael thiraiyan vaengkata netuvarai / Nannaat pooththa naakila vaengkai / Naruvee yaatiya porivari manjnjai / Nanaippasung kurunthin naarusinai yirunthu / Thunaippayirn thakavun thunaitharu thankaar / Varuthum yaamenath thaerriya / Paruvang kaanaathu paayinraal mazhaiyae.

பகிர்
கதை

பாலை · காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்

தலைமகன் பிரிய வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. · காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் பாடியது