பாடல் 87 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 87 · பாலை · மதுரைப் பேராலவாயார்

தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம்கன்றுவாய் சுவைப்ப முன்றில் தூங்கும்படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பைநல்கூர் சீறூர் எல்லித் தங்கிக்குடுமி நெற்றி நெடுமரச் சேவல்தலைக்குரல் விடியல் போகி முனாஅதுகடுங்கண் மறவர் கல்கெழு குறும்பின்எழுந்த தண்ணுமை இடங்கட் பாணிஅருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக்குன்றசேர் கவலை இசைக்கும் அத்தம்நனிநீ டுழந்தனை மன்னே அதனால்வைகுசுடர் விளங்கும் வாந்தோய் வியனகர்ச்சுணங்கணி வனமுலை நலம்பா ராட்டித்தாழிருங் கூந்தனங் காதலிநீளமை வனப்பின் தோளுமா ரணைந்தே

Theenthayir kataintha thiralkaal maththam / Kanruvaay suvaippa munril thoongkum / Patalaip pantharp pulvaey kurampai / Nalkoor seeroor ellith thangkik / Kutumi nerri netumaras saeval / Thalaikkural vitiyal poaki munaaathu / Katungkan maravar kalkezhu kurumpin / Ezhuntha thannumai itangkat paani / Arunjuram selvoar nenjam thunnenak / Kunrasaer kavalai isaikkum aththam / Naninee tuzhanthanai mannae athanaal / Vaikusutar vilangkum vaanthoay viyanakars / Sunangkani vanamulai nalampaa raattith / Thaazhirung koonthanang kaathali / Neelamai vanappin thoalumaa ranainthae

பகிர்
கதை

பாலை · மதுரைப் பேராலவாயார்

வினைமுற்றி மீளுந் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · மதுரைப் பேராலவாயார் பாடியது