பெரும்பாணாற்றுப்படை
அடிகள் 321–330 · கடியலூர் உருத்திரங் கண்ணனார்
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பைமாட மோங்கிய மணன்மலி மறுகிற்பரதர் மலிந்த பல்வேறு தெருவிற்சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பினெல்லுழு பகட்டொடு கறவை துன்னாஏழகத் தகரோ டெகினங் கொட்குங்கூழுடை நல்லிற் கொடும்பூண் மகளிர்கொன்றை மென்சினைப் பனிதவழ்பவை போற்பைங்கா ழல்கு னுண்டுகி னுடங்கமால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந் தாலும்
மேற்கிலிருந்து வரும் குதிரைகளோடு வடதிசைப் பொருள்களைக் கொண்டு வந்து தரும் மரக்கலங்கள் சூழ்ந்த பெருங்கடற்பக்கத்தையும், மாடங்கள் ஓங்கிய மணல் மிகுந்த தெருவையும், பரதவர் மிகுந்த பல்வேறு தெருக்களையும், தொழிலாளர் காக்கும் மிக உயர்ந்த பண்டசாலைகளையும், நெல் உழும் எருதுகளோடு பசுக்கள் நெருங்காத மேழகக் கிடாயோடு நாயும் சுழன்று திரியும் சோறுடைய நல்ல வீடுகளையும் உடைய பட்டினத்தில், கொன்றையின் மெல்லிய கொம்புகளில் பனி தவழ்வது போலப் பசிய மணிவடம் கிடக்கும் அல்குலில் மெல்லிய துகில் அசைய, மால் வரைச் சிலம்பில் மகிழ்ச்சி மிக்கு ஆரவாரிக்கும் தோகையையுடைய மயில் போல உலாவி —
…and the shore where the ships crowd in with the west's horses and the north's goods; the sand-thick street with its tall mansions; the many separate streets where the fisher folk are crowded; the great high warehouses that the workmen guard; and the good houses full of food where the dog circles about the goat of the herds and the cows never come near the ploughing bull. In that port the women walk with their fine cloth stirring over waist-bands strung with pale gems, like the mist drifting on the tender branches of the kondrai, and they move like a peacock whose pride swells as it cries on the great mountain's slope —
இந்தப் பத்து ஒரு துறைமுகத்தின் சமூக வரைபடம்: கப்பல்கள், மாடங்கள், மீனவர் தெரு, பண்டசாலை, உணவு நிறைந்த வீடு. ஒவ்வொரு வகை மனிதருக்கும் தனி இடம்.
கவனிக்க: மாடங்களுக்கும் மீனவர் தெருவுக்கும் இடையே உள்ள வேறுபாடு மறைக்கப்படவில்லை. ஆனால் இரண்டும் ஒரே பட்டினத்தின் பகுதிகள். இதுவே நகரம் என்றால் என்ன என்பதற்கான சங்க வரையறை.
This is a social map of a port: ships, mansions, the fishermen's street, the warehouse, the house full of food. Each kind of person has a place.
The difference between the mansions and the fishermen's street is not hidden — and both belong to the same town. This is the Sangam definition of a city.
அடிகள் 321–330 · கடியலூர் உருத்திரங் கண்ணனார்
Lines 321–330 · Kadiyalur Uruttirankannanar
ஒரே நகரில் வேறுபட்ட வாழ்க்கைகள் இருப்பதை மறைக்காமல் காட்டுவது எதைச் சொல்கிறது?
What does it say that the poem shows different lives in one city without hiding the difference?