பழநி
பழநி
தனன தந்தன தானன தானனதனன தந்தன தானன தானனதனன தந்தன தானன தானன ...... தனதானவிதமி சைந்தினி தாமலர் மாலைகள்குழல ணிந்தநு ராகமு மேசொலிவிதர ணஞ்சொலி வீறுக ளேசொலி ...... யழகாகவிரிகு ரும்பைக ளாமென வீறியகனக சம்ப்ரம மேருவ தாமதிவிரக மொங்கிய மாமுலை யாலெதி ...... ரமர்நாடிஇதமி சைந்தன மாமென வேயினநடைந டந்தனர் வீதியி லேவரஎவர்க ளுஞ்சித மால்கொளு மாதர்கண் ...... வலையாலேஎனது சிந்தையும் வாடிவி டாவகைஅருள்பு ரிந்தழ காகிய தாமரைஇருப தங்களி னாலெனை யாள்வது ...... மொருநாளேமதமி சைந்தெதி ரேபொரு சூரனையுடலி ரண்டுகு றாய்விழ வேசினவடிவு தங்கிய வேலினை யேவிய ...... அதிதீராமதுர இன்சொலி மாதுமை நாரணிகவுரி யம்பிகை யாமளை பார்வதிமவுந சுந்தரி காரணி யோகினி ...... சிறுவோனேபதமி சைந்தெழு லோகமு மேவலம்நொடியில் வந்திடு மாமயில் மீதொருபவனி வந்தக்ரு பாகர சேவக ...... விறல்வீராபருதி யின்ப்ரபை கோடிய தாமெனும்வடிவு கொண்டருள் காசியின் மீறியபழநி யங்கிரி மீதினில் மேவிய ...... பெருமாளே.
பழநி
Palani