திருத்தணிகை
திருத்தணிகை
தனத்தன தானம் தனத்தன தானம்தனத்தன தானம் ...... தனதானவினைக்கின மாகுத் தனத்தினர் வேளம்பினுக்கெதி ராகும் ...... விழிமாதர்மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்சமத்திடை போய்வந் ...... துயர்மூழ்கிக்கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்கருக்குழி தோறுங் ...... கவிழாதேகலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்கழற்புக ழோதுங் ...... கலைதாராய்புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்சியைப்புணர் வாகம் ...... புயவேளேபொருப்பிரு கூறும் படக்கடல் தானும்பொருக்கெழ வானும் ...... புநக்முளச்சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்திறக்கம ராடுந் ...... திறல்வேலாதிருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்திருத்தணி மேவும் ...... பெருமாளே.
திருத்தணிகை
திருத்தணிகை