ஆறு திருப்பதி
ஆறு திருப்பதி
தனதன தனதானன தனதன தனதானனதனதன தனதானன ...... தனதானஅலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்அபகட மகபாவிகள் ...... விரகாலேஅதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்அசடரொ டுறவாடிகள் ...... அநியாயக்கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்கருதிடு கொடியாருட ...... னினிதாகக்கனதன முலைமேல்விழு கபடனை நி முடனைகழலிணை பெறவேயினி ...... யருள்வாயேஅலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகியஅறுமுக வடிவே அருள் ...... குருநாதாஅசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெறஅதிரிடும் வடிவேல்விடு ...... மதிசூராதலையய னறியாவொரு சிவகுரு பரனேயெனதரணியி லடியார்கண ...... நினைவாகாசகலமு முதலாகிய அறுபதி நிலைமேவியதடமயில் தனிலேறிய ...... பெருமாளே.
ஆறு திருப்பதி
the six abodes