பாடல் 106 · நற்றிணை · பல புலவர்கள்

நற்றிணை 106 · நெய்தல் · தொண்டைமான் இளந்திரையன்

அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல்எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொளஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாதுஅசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்குஉயவினென் சென்று யான் உள் நோய் உரைப்பமறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர்ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதிமுறி திமிர்ந்து உதிர்த்த கையள்அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே

Arithalum arithiyoa paaka perungkatal / Eri thirai kozheeiya ekkar veri kola / Aatu vari alavan oatuvayin aarraathu / Asaii ul ozhintha vasai theer kurumakatku / Uyavinen senru yaan ul noay uraippa / Marumozhi peyarththal aarraal naru malar / Njaazhal am sinaith thaazhinar kozhuthi / Muri thimirnthu uthirththa kaiyal / Arivu anjar uruvi aay mata nilaiyae

பகிர்
கதை

நெய்தல் · தொண்டைமான் இளந்திரையன்

பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு உணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான் தேர்ப்பாகற்குச்சொல்லியது