பழநி
பழநி
தனனத் தனதன தானன தானனதனனத் தனதன தானன தானனதனனத் தனதன தானன தானன ...... தனதானகலகக் கயல்விழி போர்செய வேள்படைநடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள்கனியக் கனியவு மேமொழி பேசிய ...... விலைமாதர்கலவித் தொழினல மேயினி தாமெனமனமிப் படிதின மேயுழ லாவகைகருளைப் படியெனை யாளவு மேயருள் ...... தரவேணும்இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகிகுழையத் தழுவிய மேன்முயி னாலுயர்இசைபெற் றருளிய காமுக னாகிய ...... வடிவோனேஇதமிக் கருமறை வேதிய ரானவர்புகலத் தயவுட னேயருள் மேன்மைகள்இசையத் தருமநு கூலவ சீகர ...... முதல்வோனேநிலவைச் சடைமிசை யேபுனை காரணர்செவியிற் பிரணவ மோதிய தேசிகநிருதர்க் கொருபகை யாளியு மாகிய ...... சுடர்வேலாநிமலக் குருபர ஆறிரு பார்வையும்அருளைத் தரஅடி யார்தமை நாடொறும்நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு ...... முரியோனேபலவிற் கனிபணை மீறிய மாமரமுருகிற் கனியுட னேநெடு வாளைகள்பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய ...... வகையாலேபழனத் துழவர்க ளேரிட வேவிளைகழனிப் புரவுகள் போதவு மீறியபழநிச் சிவகிரி மீதினி லேவளர் ...... பெருமாளே.
பழநி
பழநி