பழநி
பழநி
தனதனன தத்த தான தனதனன தத்த தானதனதனன தத்த தான ...... தனதானகலைகொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாயகபிலர்பக ரக்க ணாதர் ...... உலகாயர்கலகமிடு தர்க்கர் வாம பயிரவர் விருத்த ரோடுகலகலென மிக்க நூல்க ...... ளதனாலேசிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதிதெரிவரிய சித்தி யான ...... வுபதேசந்தெரிதர விளக்கி ஞான தரிசந மளித்து வீறுதிருவடி யெனக்கு நேர்வ ...... தொருநாளேகெலையுற எதிர்த்த கோர இபமுக அரக்க னோடுகுரகத முகத்தர் சீய ...... முகவீரர்குறையுட லெடுத்து வீசி யலகையொடு பத்ர காளிகுலவியிட வெற்றி வேலை ...... விடுவோனேபலமிகு புனத்து லாவு குறவநிதை சித்ர பாரபரிமள தனத்தில் மேவு ...... மணிமார்பாபடைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறுபழநிமலை யுற்ற தேவர் ...... பெருமாளே.
பழநி
பழநி