poem 72 · Purananuru · Many poets

புறநானூறு 72 · இனியோனின் வஞ்சினம் · பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

நகுதத் கனரே, நாடு மீக் கூறுநர்;இளையன் இவன் என உளையக் கூறிப்படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்நெடுநல் யானையும், தேரும், மாவும்,படைஅமை மறவரும், உடையும் யாம் என்றுஉறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரைஅருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடுஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்தியஎன் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்விமாங்குடி மருதன் தலைவன் ஆக,உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்புலவர் பாடாது வரைக, என் நிலவரை;புரப்போர் புன்கண் கூர,இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.
Share
கதை

இனியோனின் வஞ்சினம் · பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

திணை: காஞ்சி · துறை: வஞ்சினக் காஞ்சி