பகுதி 6 · மலைபடுகடாம் · இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்

மலைபடுகடாம் 6 · தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்

தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்குயாமவ ணின்றும் வருதும் நீயிரும்கனிபொழி கானம் கிளையொ டுணீஇயதுனைபறை நிவக்கும் புள்ளின மானப்புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்வனைபுனை எழின்முலை வாங்கமைத் திரடோ ள்மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்முனைபாழ் படுக்கும் துன்னருந் துப்பின்இசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்குப்
பகிர்

பொருள்

தூய பூக்கள் நெருங்கின கரையைப் பொருகின்ற ஓங்கத்தினையுடைய மலையுச்சியினின்றும் இழிந்த நல்லாறு கடலை நோக்கிப் போனாற் போல, யாம் அவனை நோக்கிச் சென்று சில பெற்று வருகின்றோம்; நீயிரும் வாருங்கள். பழங்களைச் சொரிகின்ற காட்டிற் பழங்களைச் சுற்றத்தோடே சென்று தின்றற்கு விரைந்த பறத்தற்குத் தொழிலிலே ஓங்கும் பறவைத் திரளை ஒக்க, கைவேலையாகிய மாலையாற் பொலிவு பெற்ற வண்டுகளை உண்டாக்குகின்ற மார்பினையும், ஓவியத்திலே முலையாகப் பண்ணின கைவேலையின் அழகைத் தன்னிடத்தே உடைய முலையினையும், வளைந்த மூங்கிலையொத்த திரண்ட தோளினையும், பூப்போலும் குளிர்ச்சியையுடைய கண்ணினையுடைய கற்புடை மகளிர்க்குக் கணவனும், பகைப்புலத்தைப் பாழுண்டாக்கும் கிட்டுதற்கரிய வலியினையும், தாம் பிறரைக் கூறும் புகழாகிய விதையாலே பிறர் பொருள்களை நச்சுதலாகிய ஏர் உழவினையுடைய பரிசிலர்க்கும்,

Meaning

As the good river, leaving the height whose banks are crowded with white flowers and running down, goes on to the sea — so we go to him and bring back something, and you should come too. Like the flocks of birds that fly in haste to the forest that sheds its fruit, to eat it with their own kind: such is he — his chest bright with wrought garlands that the bees haunt, his breast shaped in paint, his arms round as bent bamboo, husband of the women whose eyes are cool as flowers; his strength, hard to come at, lays the enemy's field waste; and to the bards who plough for other men's wealth with the seed of his praise,

சொற்பொருள் Word by word

தூமலர் துவன்றிய கரை
the bank crowded with white flowers
கரைபொரு நிவப்பு
the height that strikes the bank
நல்யாறு கடல் படர்ந்தாங்கு
as the good river goes to the sea
கனிபொழி கானம்
the forest that sheds fruit
துனைபறை நிவக்கும் புள்ளினம்
the flock of birds flying in haste
புனைதார்
the wrought garland
வண்டுபடு மார்பு
the chest the bees haunt
வனைபுனை எழில் முலை
the breast shaped as in a painting
வாங்கு அமை திரள் தோள்
the round arms like bent bamboo
மலர்போல் மழைக்கண்
eyes cool as flowers
முனைபாழ் படுக்கும் துப்பு
the strength that lays the field waste
இசைநுவல் வித்து
the seed of praise
நசையேர் உழவர்
the bards who plough in desire

விளக்கம்

இங்கே கவிதை ஒரு வழியை முன்வைக்கிறது: ஆறு கடலை நோக்கிப் போவது போல நாமும் அவனை நோக்கிப் போகிறோம். அதாவது பரிசில் பெறுவது இயற்கையின் இயக்கம் போல.

"இசைநுவல் வித்தின் நசையேர் உழவர்" — புகழை விதையாக வைத்து உழும் பாடலார். இது சங்க கவிதையின் மிகச் சிறந்த உவமை: கவிதை ஒரு வேளாண்மை.

Explanation

The poem offers a road: as the river goes to the sea, so we go to him. Seeking a patron's gift is as natural as water finding the sea.

"Bards who plough with the seed of praise" — poetry as farming. This is one of the finest images in Sangam verse: a poem is a crop.

கதை

மலைபடுகடாம்

அடிகள் 51–60 · இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்

A story

Lines 51–60 · Perunkausikanar of Iraniyamuttam in Perunkunrur

சிந்தனைக்கு

புகழை விதைத்து உழுவது கலைஞனின் வேலையா, அல்லது அவன் கட்டாயமா?

To reflect on

Is ploughing with praise an artist's work, or his necessity?