மலைபடுகடாம்
அடிகள் 91–100 · இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின்வரைபுரை நிவப்பின் வான்றோய் இஞ்சிஉரைசெல வெறுத்தவன் மூதூர் மாலையும்கேளினி வேளைநீ முன்னிய திசையேமிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற்புதுவது வந்தன் றிதுவதன் பண்பேவானமின்னு வசிவு பொழிய ஆனாதுஇட்ட வெல்லாம் பெட்டாங்கு விளையப்பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்துஅகலிரு விசும்பி னாஅல் போல
இரையைத் தேடி உலாவும் வளைந்த காலினையுடைய முதலைகளோடே திரை உண்டாக ஆழ்ந்த கல்லை அகழ்ந்த கிடங்கினையும், மலையையொத்த உயர்ச்சியினால் வானைத் தீண்டும் மதிலினையுமுடைய, புகழ் எங்கும் பரக்கும்படி செறிந்த அவனுடைய பழைய ஊரினதியல்பும் இருக்கும்படி கேட்பாயாக. இனி அதில் இப்பொழுது நீ நன்னனைக் கருதிச் செல்கின்ற திசையைக் கேள். மிகுகின்ற செல்வம் முற்றுப்பெற்ற புதுவருவாயையுடைய ஊர்களால் புதிதாகிய தன்மை வந்தது; இதுவே அதன் பண்பு. அமையாதே நிலத்தே இட்ட விதைகளெல்லாம் இன்னவாறே விளைய வேண்டும் என்று ஆண்டுள்ளார் விரும்பினாற் போல விளையும்படியாக மேகம் மின்னாகிய பிளந்து வடுப்படுதலோடே பெய்கையினாலே, அம்மழையோடே தங்கின அகன்ற இடங்களையுடைய பெரிய கொல்லைநிலத்தே, புல்லிய கொடியினையுடைய முசுண்டை ஏனைப் பூதங்கள் தோன்றுதற்குக் காரணமான பெரிய ஆகாயத்திற் கார்த்திகையாகிய மீன் போல வெள்ளிதாக மலர்ந்தன;
Hear the nature of his ancient town, whose moat is dug deep in stone where the crocodiles range, whose wall is high as a mountain and touches the sky. Now hear the direction you mean to take. The wealth has come to its full, and the villages of a new harvest have made the land new — that is its character. So that every seed dropped in the ground should grow exactly as the sower wished it, the sky splits with lightning and rains; and in the wide field where the rain has stayed, the little msundai creeper has flowered white as the Krittika star in the wide sky where the elements are born —
இப்போது நாடு ஒரு விவசாயிக் காட்சியாகிறது: மின்னல், மழை, விதை, முசுண்டைப் பூ. அதாவது நன்னன் நாடு வளம் மிக்கது என்பதைக் கவிதை புள்ளிவிவரமாகச் சொல்லவில்லை, கண்ணால் காட்டுகிறது.
"இட்ட வெல்லாம் பெட்டாங்கு விளைய" — விதைத்தது விரும்பியபடி விளைய வேண்டும். இது விவசாயியின் மிக அடிப்படையான பிரார்த்தனை. கவிதை அதை மழைக்குக் கடமையாக்குகிறது.
The country becomes a farmer's scene: lightning, rain, seed, a flowering creeper. The poem does not state that Nannan's land is rich; it shows it.
"All that was sown growing as they wished": the farmer's most basic prayer. The poem makes it the rain's obligation.
அடிகள் 91–100 · இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
Lines 91–100 · Perunkausikanar of Iraniyamuttam in Perunkunrur
விதைத்தது விளைவது இயற்கையின் கடமையா, அல்லது விவசாயியின் நம்பிக்கையா?
Is a sown seed growing nature's duty, or the farmer's faith?