பாடல் 113 · நற்றிணை · பல புலவர்கள்

நற்றிணை 113 · பாலை · இளங்கீரனார்

உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய்கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்பெருங் காடு இறந்தும் எய்த வந்தனவால்அருஞ் செயல் பொருட் பிணி முன்னி யாமேசேறும் மடந்தை என்றலின் தான் தன்நெய்தல் உண்கண் பைதல் கூரபின் இருங் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்துஉதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும்ஆம்பல்அம் குழலின் ஏங்கிகலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே

Uzhai ananthu unta irai vaangku uyarsinaip / Pul arai iraththip pothip purap pasung kaay / Kal saer siru neri malkath thaaam / Perung kaatu iranthum eytha vanthanavaal / Arunj seyal porut pini munni yaamae / Saerum matanthai enralin thaan than / Neythal unkan paithal koora / Pin irung koonthalin maraiyinal perithu azhinthu / Uthiyan mantiya oli thalai njaatpin / Immen perung kalaththu iyavar oothum / Aampalam kuzhalin aengki / Kalangku anjar uruvoal pulampu kol noakkae

பகிர்
கதை

பாலை · இளங்கீரனார்

இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது