குறிஞ்சி · தொல்கபிலர்
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் தோழி தலைவிக்கு உரைப்பாளாய் சிறைப்புறமாகச் சொல்லியது
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்வைகிக் கேட்டுப் பையாந்திசினேஅளிதோ தானே தோழி அல்கல்வந்தோன்மன்ற குன்ற நாடன்துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரைபொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறுபாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்திமையல் மடப் பிடி இனையகை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே
Ven koatu kontu viyal arai vaippavum / Passoon kenti val ukir munakkavum / Marukuthoru pulaavum sirukuti aravam / Vaikik kaettup paiyaanthisinae / Alithoa thaanae thoazhi alkal / Vanthoanmanra kunra naatan / Thuli peyal poriththa pullith thol karai / Poru thirai nivappin varum yaaru anjuval / Eerng kural urumin aar kali nal aeru / Paampu kavin azhikkum oangku varai poththi / Maiyal matap piti inaiya / Kai oonrupu izhitharu kaliru erinthanrae
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் தோழி தலைவிக்கு உரைப்பாளாய் சிறைப்புறமாகச் சொல்லியது