பாடல் 106 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 106 · பழநி

தனன தனதனன தந்தத்த தந்ததனதனன தனதனன தந்தத்த தந்ததனதனன தனதனன தந்தத்த தந்ததன ...... தந்ததானஅதல விதலமுத லந்தத்த லங்களெனஅவனி யெனஅமரர் அண்டத்த கண்டமெனஅகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநுஅமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமெனஅறையு மறைஅயனஅ ருந்தத்து வங்களெனஅணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம்உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலிருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்விலுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன்உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமெனமதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோததத ததததத தந்தத்த தந்ததததிதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதிதகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதிசகக சககெணக தந்தத்த குங்கெணகடிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடிதகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம்பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருகஅகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளிபவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகுகவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே.
பகிர்
கதை

பழநி

பழநி

A story

Palani