பாடல் 108 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 108 · பழநி

தனதன தானத் தான தனத்தத்தனதன தானத் தான தனத்தத்தனதன தானத் தான தனத்தத் ...... தனதானஅரிசன வாடைச் சேர்வை குளித்துப்பலவித கோலச் சேலை யுடுத்திட்டலர்குழ லோதிக் கோதி முடித்துச் ...... சுருளோடேஅமர்பொரு காதுக் கோலை திருத்தித்திருநுதல் நீவிப் பாளித பொட்டிட்டகில்புழு காரச் சேறு தனத்திட் ...... டலர்வேளின்சுரத விநோதப் பார்வைமை யிட்டுத்தருணக லாரத் தோடைத ரித்துத்தொழிலிடு தோளுக் கேறவ ரித்திட் ...... டிளைஞோர்மார்துறவினர் சோரச் சோரந கைத்துப்பொருள்கவர் மாதர்க் காசைய ளித்தற்றுயரற வேபொற் பாதமெ னக்குத் ...... தருவாயேகிரியலை வாரிச் சூரரி ரத்தப்புணரியின் மூழ்கிக் கூளிக ளிக்கக்கிரணவை வேல்புத் தேளிர்பி ழைக்கத் ...... தொடுவோனேகெருவித கோலப் பாரத னத்துக்குறமகள் பாதச் சேகர சொர்க்கக்கிளிதெய்வ யானைக் கேபுய வெற்பைத் ...... தருவோனேபரிமள நீபத் தாரொடு வெட்சித்தொடைபுனை சேவற் கேதன துத்திப்பணியகல் பீடத் தோகைம யிற்பொற் ...... பரியோனேபனிமல ரோடைச் சேலுக ளித்துக்ககனம ளாவிப் போய்வரு வெற்றிப்பழநியில் வாழ்பொற் கோமள சத்திப் ...... பெருமாளே.
பகிர்
கதை

பழநி

பழநி

A story

Palani