பட்டினப்பாலை
அடிகள் 171–180 · கடியலூர் உருத்திரங் கண்ணனார்
உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும்வெளிலிளக்குங் களிறுபோலத்தீம்புகார்த் திரைமுன்றுறைத்தூங்குநாவாய் துவன்றிருக்கைமிசைச்கூம்பி னசைச்கொடியும்மீந்தடிந்து விடக்கறுத்துஊன்பொரிக்கும் ஒலிமுன்றில்மணற்குவைஇ மலர்சிதறிப்பலர்புகுமனைப் பலிப்புதவின்நறவுநொடைக் கொடியோடு ... 180.
அசையாத கம்பத்தினை அசைக்கும் யானை போல நின்று, கண்ணுக்கு இனிதாகிய புகாரிடத்துத் திரையினையுடைய துறையின் முன்னே, நிறைந்த இருப்பினையுடைய அசைகின்ற நாவாயின் மேல்நட்ட பாய்மரத்தின்மேலெடுத்த விரும்புதலையுடைய கொடியும், மீனை அறுத்துப் பின் இறைச்சியையும் அறுத்து அவ்விரண்டு தசையினையும் பொரிக்கும் ஆரவாரத்தினையுடைய முற்றத்தில், மணலை மிகப் பரப்பிச் செம்பூக்களையும் சிதறி, தெய்வத்திற்குக் கொடுக்கும் பலியினையுடைய வாசலையுடைய, கள்ளுண்பார் பலரும் செல்லும் மனைகளில் சிறப்புடைய கள்ளின் விலைக்குக் கட்டின கொடியோடே ஏனையவற்றிற்குக் கட்டின கொடிகளும் மிகக் கலக்கையினாலே —
Like an elephant that shakes a post that will not shake, the banners rise on the masts of the rocking ships that lie at anchor in the harbour of sweet Puhar, before the shore where the waves break. In the yard where the noise of cutting fish and then cutting flesh and frying both goes up, they spread the sand wide and scatter red flowers; and at the doors of the houses where many drinkers come, with the offering for the god set out, the banner hung for the price of the choice toddy is mingled thick with the banners hung for everything else —
இந்தப் பத்தில் ஒரு வணிக நகரத்தின் ஒலி முழுவதும் உள்ளது: மீன் அறுக்கும் சத்தம், இறைச்சி பொரியும் ஓசை, கள் விற்கும் கொடிகள்.
கவனிக்க: கள்ளின் விலைக்குக் கட்டிய கொடி பிற கொடிகளோடு கலக்கிறது. அதாவது கள் விற்பது இங்கே ஒரு இயல்பான வணிகம் — குற்றம் அல்ல. சங்க தமிழகம் கள்ளை இழிவாகக் காணவில்லை.
The whole sound of a trading port is here: fish being cut, flesh frying, and the banners advertising toddy.
A banner hung for the price of toddy mixes with all the others. Selling drink is ordinary business here, not a sin — Sangam Tamil country does not despise toddy.
அடிகள் 171–180 · கடியலூர் உருத்திரங் கண்ணனார்
Lines 171–180 · Kadiyalur Uruttirankannanar
கள்ளை இயல்பான வணிகமாகக் காணும் சமூகம் எப்படிப்பட்டது?
What kind of society treats toddy as ordinary trade?