பட்டினப்பாலை
அடிகள் 221–230 · கடியலூர் உருத்திரங் கண்ணனார்
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாந்கும்பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றிஅருங்கரை கவியக் குத்திக் குழிகொன்றுபெருங்கை யானை பிடிபுக் காங்குநுண்ணிதின் உணர நாடி நண்ணார்செறிவுடைத் திண்காப் பேறிவாள் கழித்துஉருகெழு தாயம் ஊழினெய்திப்பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்கடியரண் தொலைத்த கதவுகொல் மருப்பின்முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றாள்
கூரிய உகிரினையும் வளைந்த வரிகளையுமுடைய புலிக்குட்டி கூட்டிடத்தே அடையுண்டிருந்து வளர்ந்தாற் போலப், பகைவர் காவலிடத்தேயிருந்து தனக்குப் பெருமை வயிரமாக முற்றி, தான் அகப்படப்பண்ணின குழியில் ஏறுதற்கு அரிய கரைகளை இடியும்படி கோட்டாலே குத்திக் குழியைத் தூர்த்துப் பெண்யானையிடத்தே சென்றாற் போல, தன் உணர்வு கூரிதாக உணரும்படி இதுவே காரியம் என்று ஆராய்ந்து, பகைவருடைய நெருங்கின திண்ணிய காவலாகிய வாட்படையை ஓட்டி, பகைவர் அச்சம் பொருந்துதற்குக் காரணமான தன் அரசுரிமையை முறையாலே பெற்று, தான் இறையாகப் பெற்ற அரசுரிமையால் மகிழ்ச்சி பொருந்துதல் செய்யானாய் —
Like a tiger's cub with sharp claws and curving stripes that grew up penned in a fold, and like a great elephant that, having thrown up the steep banks of the pit it dug for itself, breaks them with its tusk and goes straight to the females — so he, having been held in the enemy's guard and grown hard in that, searched out with a sharpened understanding what was the thing to be done, drove off the close-kept swordsmen of their watch, and by due course took back the kingship that makes his enemies afraid. And he took no joy in the royal tribute he had won —
இங்கே கரிகாலனின் வரலாறு குறிப்பாகச் சொல்லப்படுகிறது: சிறையிலிருந்து வளர்ந்து, அரசை மீட்டவன். புலிக்குட்டியும் யானையும் அதற்கு உவமை.
"பெற்றவை மகிழ்தல் செய்யான்" — வெற்றியில் மகிழாதவன். அதாவது அவன் நிற்கவில்லை; மேலும் போருக்குப் போகிறான். இது புகழ்ச்சியாகத் தொடங்கி ஒரு கேள்வியாக முடிகிறது.
Karikalan's own history is sketched in: raised in captivity, he took back his kingdom. The tiger cub and the elephant are its figures.
"He took no joy in what he won." He does not stop; he goes to war again. What begins as praise quietly becomes a question.
அடிகள் 221–230 · கடியலூர் உருத்திரங் கண்ணனார்
Lines 221–230 · Kadiyalur Uruttirankannanar
வெற்றியில் மகிழாதவன் வீரனா, அல்லது அமைதியை அறியாதவனா?
Is a man who takes no joy in victory a hero, or a man who cannot rest?