பட்டினப்பாலை
அடிகள் 181–190 · கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பிறபிறவு நனிவிரைஇப்பல்வே றுருவிற் பதாகை நீழல்செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற்செல்லா நல்லிசை யுமரர் காப்பின்நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்காலின் வந்த கருங்கறி மூடையும்வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்கங்கை வாரியும் காவிரிப் பயுனும்
பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய பெருங்கொடிகளும், கள்ளின் விலைக்குக் கட்டின கொடியோடே முன் கூறிய கொடிகளும் பிற கொடிகளும் பதாகைகளும் கலக்கையினாலே, இவற்றின் நிழலில் செல்லும் ஞாயிற்றின் கிரணங்கள் நுழையப்படாத வளவிய ஊர் எல்லையிடத்து, கெடாத நல்ல புகழினையுடைய தேவர்கள் பாதுகாவலினாலே, கடலிலே காற்றான் வந்த நிமிர்ந்த செலவினையுடைய குதிரைகளும், கடலிலே காற்றான் வந்த கரிய மிளகுப் பொதிகளும், மேருவில் பிறந்த மாணிக்கமும் சாம்பூநதமென்னும் பொன்னும், பொதியில் மலையில் பிறந்த சந்தனமும் அகிலும், தென்கடலில் பிறந்த முத்தும், கீழ்த்திசைக் கடலில் படர்ந்த பவளமும், கங்கையாற்றில் உண்டாகிய பொருளும், காவிரியில் உண்டாகிய பொருளும் —
The great banners of many different shapes — those hung for the toddy's price and the others told of before and yet others and the painted cloths — are so mingled that the sun's travelling rays cannot enter the shade they make across the whole wide town. And under the guardianship of the gods whose good fame never fails, the town holds the tall-stepping horses that came over the sea by wind, and the dark bales of pepper that came over the sea by wind, and the rubies and the fine gold born of the northern mountain, and the sandal and agallochum born of the western hill, and the pearls of the southern sea, and the coral that spreads in the eastern sea, and the wealth of the Ganges, and the produce of the Kaveri —
இங்கே பட்டினம் ஒரு உலக வரைபடமாகிறது: வடமலை, மேல்மலை, தென்கடல், கிழக்குக்கடல், கங்கை, காவிரி. அதாவது இந்த நகரம் எல்லா திசைகளையும் ஒரே இடத்தில் சேர்க்கிறது.
மிக அழகான கற்பனை: கொடிகளின் நிழலில் ஞாயிறு நுழைய முடியாது. அதாவது வணிகத்தின் அளவு ஒளியையே மறைக்கிறது.
Pattinam becomes a map of the world here: the northern mountain, the western hill, the southern sea, the eastern sea, the Ganges, the Kaveri. The city gathers every direction in one place.
And the finest image: the sun cannot enter the shade of the banners. Trade's bulk is large enough to block light.
அடிகள் 181–190 · கடியலூர் உருத்திரங் கண்ணனார்
Lines 181–190 · Kadiyalur Uruttirankannanar
ஒரு நகரம் எல்லா திசைகளையும் சேர்த்தால் அது உலகமா, அல்லது சந்தையா?
When a city gathers every direction, is it a world, or a market?