பதிகம் 689 · தேவாரம் · திருஞானசம்பந்தர் · திருநாவுக்கரசர் · சுந்தரர்

திருக்கழுக்குன்றம் – திருத்தாண்டகம் · 6.92

1. மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை௿ முதுபிணக்கா டுடையானை முதலா னானை௿ ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை௿ ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்௿ பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்௿ புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்௿ காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்௿ கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.2. பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்௿ பாய்புலித்தோ லுடையானைப் பகவன் றன்னைச்௿ சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்௿ சுடருருவில் என்பறாக் கோலத் தானை௿ அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னை௿ ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்௿ கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்௿ கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
பகிர்