பதிகம் 684 · தேவாரம் · திருஞானசம்பந்தர் · திருநாவுக்கரசர் · சுந்தரர்

திருச்சிவபுரம் – திருத்தாண்டகம் · 6.87

1. வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்௿ வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்௿ ஆனவன்காண் ஆனைந்து மாடி னான்காண்௿ ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங்௿ கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்௿ கருதுவார் இதயத்துக் கமலத் தூறுந்௿ தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்௿ சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.2. நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்த௿ நாதன்காண் பூதகண மாட ஆடுஞ்௿ சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்௿ துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும்௿ பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற் றான்காண்௿ புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற௿ திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்௿ சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.3. வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்௿ மலரவன்மால் காண்பரிய மைந்தன் றான்காண்௿ கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்௿ கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்௿ அம்பர்நகர்ப் பெருங்கோயி லமர்கின் றான்காண்௿ அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்௿ செம்பொனெனத் திகழ்கின்ற உருவத் தான்காண்௿ சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.4. பித்தன்காண் தக்கன்றன் வேள்வி யெல்லாம்௿ பீடழியச் சாடி யருள்கள் செய்த௿ முத்தன்காண் முத்தீயு மாயி னான்காண்௿ முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க௿ அத்தன்காண் புத்தூரி லமர்ந்தான் றான்காண்௿ அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட௿ சித்தன்காண் சித்தீச் சரத்தான் றான்காண்௿ சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.5. தூயவன்காண் நீறு துதைந்த மேனி௿ துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்௿ தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்௿ சிறுமான்கொள் செங்கையெம் பெருமான் றான்காண்௿ ஆயவன்காண் ஆரூரி லம்மான் றான்காண்௿ அடியார்கட் காரமுத மாயி னான்காண்௿ சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்௿ சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.6. பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்௿ பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற௿ நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்௿ நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்௿ பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றி௿ பிரியாது பலநாளும் வழிபட் டேத்துஞ்௿ சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்௿ சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.7. வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்௿ வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்௿ மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்௿ வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க௿ கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்௿ காமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண்௿ செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த௿ சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.8. இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் மறைந்து போயின.6.87.8-9 கலையாரு நூலங்க மாயி னான்காண்௿ கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி௿ மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற௿ மண்ணாகி விண்ணாகி நின்றான் றான்காண்௿ தலையாய மலையெடுத்த தகவி லோனைத்௿ தகர்ந்துவிழ ஒருவிரலாற் சாதித் தாண்ட௿ சிலையாரும் மடமகளோர் கூறன் றான்காண்௿ சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
பகிர்