பதிகம் 681 · தேவாரம் · திருஞானசம்பந்தர் · திருநாவுக்கரசர் · சுந்தரர்

திருச்செங்காட்டங்குடி – திருத்தாண்டகம்௿ · 6.84

1. பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்௿ பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி௿ இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்௿ எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசி௿ அருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னை௿ அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்௿ திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்௿ செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.2. துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்௿ தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட௿ அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்௿ ஆரழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து௿ மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை௿ வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற௿ செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் றன்னைச்௿ செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.3. உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை௿ உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற௿ பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்௿ பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப் பின்னும்௿ முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்௿ முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த௿ திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்௿ செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.4. கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக்௿ கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்௿ சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச்௿ சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்௿ பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே௿ பன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென்௿ சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச்௿ செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.5. நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னை௿ நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக௿ வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை௿ வியன்கெடில வீரட்டம் மேவி னானை௿ மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி௿ மதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச்௿ செஞ்சினத்த திரிசூலப் படையான் றன்னைச்௿ செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.6. கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக்௿ கடவூரில் வீரட்டங் கருதி னானைப்௿ பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் றன்னைப்௿ பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்௿ பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் றன்னைப்௿ பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று௿ சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்௿ செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.7. எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னை௿ ஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம்௿ பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்௿ புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்௿ பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்௿ பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித்௿ தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்௿ செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.8. கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்௿ கற்றார்கள் உற்றோருங் காத லானைப்௿ பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்௿ பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை௿ நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க௿ நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ்௿ செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்௿ செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.9. அரியபெரும் பொருளாகி நின்றான் றன்னை௿ அலைகடலில் ஆலால மமுது செய்த௿ கரியதொரு கண்டத்துச் செங்க ணேற்றுக்௿ கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை௿ உரியபல தொழிற்செய்யு மடியார் தங்கட்௿ குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்௿ தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்௿ செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.10. போரரவம் மால்விடையொன் றூர்தி யானைப்௿ புறம்பயமும் புகலூரும் மன்னி னானை௿ நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்௿ நீங்காமை வைத்தானை நிமலன் றன்னைப்௿ பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்௿ பிறங்கொளிவா ளரக்கன்முடி யிடியச் செற்ற௿ சீரரவக் கழலானைச் செல்வன் றன்னைச்௿ செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
பகிர்