பதினெண் சித்தர் மரபு

சித்தர்கள்

உள்ளத்தையே கோயிலாகக் கண்ட ஞானிகளின் பாடல்கள்

பகிர்

சித்தி பெற்றவர் சித்தர். யோகத்தாலும் தவத்தாலும் உடலையும் மனத்தையும் வென்று, சிவத்தைத் தம்முள்ளேயே கண்டவர்கள் அவர்கள். அகத்தியரை முதல்வராகக் கொண்டு பதினெண் சித்தர் என்று தமிழ் மரபு அவர்களைப் போற்றுகிறது. "உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்" என்ற திருமூலரின் வாக்கே சித்தர் நெறியின் அடிப்படை.

சித்தர்கள் யோகத்தையும் ஞானத்தையும் மட்டுமன்றி, சித்த மருத்துவத்தையும் தமிழுக்குத் தந்தார்கள். அவர்களுடைய பாடல்கள் படித்தவர்களுக்காக மட்டும் எழுதப்படவில்லை; தெருவில் பாடும் எளிய சொற்களில், கும்மியாகவும் கண்ணியாகவும் ஆனந்தக் களிப்பாகவும் அமைந்தவை. எளிய சொல்லுக்குள் யோக நுட்பம் மறைந்திருக்கும்; அதனால் குருவின் துணையோடு படிப்பது மரபு.

கடுவெளிச் சித்தர் "பாபஞ் செய்யாதிரு மனமே" என்று மனத்தையே நோக்கிப் பாடுகிறார். குதம்பைச் சித்தர் ஒவ்வொரு கண்ணியையும் "குதம்பாய்" என்று விளித்து முடிக்கிறார். அழுகணிச் சித்தரின் பாடல்கள் "என் கண்ணம்மா" என்று உருகுகின்றன. இங்கே படிக்கக் கிடைக்கும் சித்தர் பாடல்கள் கீழே உள்ளன.

இங்கே தொடங்குங்கள்கடுவெளிச் சித்தரின் ஆனந்தக் களிப்பிலிருந்து தொடங்குங்கள்: "பாபஞ் செய்யாதிரு மனமே".படிக்கத் தொடங்கு →

சித்தர் பாடல்கள்

ஞானப் பாடல்கள்

அடுத்த பகுதிபக்தி →