poem 23 · Akananuru · Many poets

அகநானூறு 23 · பாலை · ஒரோடோகத்துக் கந்தரத்தனார்

மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல்புதன்மிசைத் தளவி னிதன்முட் செந்நனைநெருங்குகுலைப் பிடவமொ டொருங்குபிணி யவிழக்காடே கம்மென் றன்றே யவலகோடுடைந் தன்ன கோடற் பைம்பயிர்ப்பதவின் பாவை முனைஇ மதவுநடையண்ண லிரலை யமர்பிணை தழீஇத்தண்ணறல் பருகித் தாழ்ந்துபட் டனவேயனையகொல் வாழி தோழி மனையதாழ்வி னொச்சி சூழ்வன மலருமௌவன் மாச்சினை காட்டியவ்வள வென்றா ராண்டுச் செய்பொருளே.
Share
கதை

பாலை · ஒரோடோகத்துக் கந்தரத்தனார்

தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. · ஒரோடோகத்துக் கந்தரத்தனார் பாடியது