போரும் சீரும் · கழாத் தலையார்
திணை: தும்பை · துறை: தொகை நிலை · பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் · குறிப்பு: போர்ப்புறத்துப் பொருது இவர் வீழ்ந்த காலைப் பாடியது. திணை: தும்பை. துறை : தொகை நிலை
வருதார் தாங்கி, அமர்மிகல் யாவது?பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்,குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்,பருந்து அருந்துற்ற தானையடு செருமுனிந்து,அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்,களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர,உடன்வீழ்ந் தன்றால், அமரே; பெண்டிரும்பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார்,மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே;வாடாப் பூவின், இமையா நாட்டத்து,நாற்ற உணவினோரும் ஆற்றஅரும்பெறல் உலகம் நிறையவிருந்துபெற் றனரால்; பொலிக, நும் புகழே!
திணை: தும்பை · துறை: தொகை நிலை · பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் · குறிப்பு: போர்ப்புறத்துப் பொருது இவர் வீழ்ந்த காலைப் பாடியது. திணை: தும்பை. துறை : தொகை நிலை