யான் கண்டனன் · பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
திணை: கைக்கிளை · துறை: பழிச்சுதல் · பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி
என்னைக்கு ஊர் இ·து அன்மை யானும்,என்னைக்கு நாடு இ·து அன்மை யானும்,ஆடுஆடு என்ப, ஒருசா ரோரே;ஆடன்று என்ப, ஒருசா ரோரே;நல்ல,பல்லோர் இருநன் மொழியே;அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்,முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,யான்கண் டனன் அவன் ஆடா குதலே.
திணை: கைக்கிளை · துறை: பழிச்சுதல் · பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி