பாடல் 1140 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1140 · கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக்

கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக்கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கெள்கி,அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்திஅந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை,எழுந்தமலர்க் கருநீல மிருந்தில் காட்டஇரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட,செழுந்தடநீர்க் கமலம்தீ விகைபோல் காட்டும்திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

keாzhunthalaru malarssaeாlaik kuzhaangkeாl peாykaik kaeாlmuthalai vaaleyirruk keாntarkelki, azhunthiyamaa kalirrinukkan raazhi yaenthi antharamae varaththaeாnri yarulsey thaanai, ezhunthamalark karuneela mirunthil kaatta irumpunnai muththarumpis sempeாnkaatta, sezhunthataneerk kamalamthee vikaipaeாl kaattum thirukkaeாva loorathanul kantaen naanae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி