பாடல் 3932 · பெரிய புராணம் · சேக்கிழார்

கூற்றுவ நாயனார் புராணம் · பாடல் 3932

வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கிச்சென்று தும்பைத் துறை முடித்தும் செருவில் வாகைத் திறம் கெழுமிமன்றல் மாலை மிலைந்தவர் தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடிஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆனார்
பகிர்
கதை

கூற்றுவ நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கூற்றுவ நாயனார் புராணம்