பதிகம் 466 · தேவாரம் · திருஞானசம்பந்தர் · திருநாவுக்கரசர் · சுந்தரர்

திருக்கழுமலம் – திருவிருத்தம் · 4.83

1. படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவிற் கடையார் கொடிநெடு மாடங்க ளோங்குங் கழுமலமாம் மடைவாய்க் குருகினம் பாளை விரிதொறும் வண்டினங்கள் பெடைவாய் மதுவுண்டு பேரா திருக்கும் பெரும்பதியே.
பகிர்