பதிகம் 654 · தேவாரம் · திருஞானசம்பந்தர் · திருநாவுக்கரசர் · சுந்தரர்

திருக்கயிலாயத்திருமலை – போற்றித்திருத்தாண்டகம் · 6.57

1. பாட்டான நல்ல தொடையாய் போற்றி௿ பரிசை யறியாமை நின்றாய் போற்றி௿ சூட்டான திங்கள் முடியாய் போற்றி௿ தூமாலை மத்த மணிந்தாய் போற்றி௿ ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி௿ அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி௿ காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி௿ கயிலை மலையானே போற்றி போற்றி.2. அதிரா வினைக ளறுப்பாய் போற்றி௿ ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி௿ சதுரா சதுரக் குழையாய் போற்றி௿ சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி௿ எதிரா உலக மமைப்பாய் போற்றி௿ என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி௿ கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி௿ கயிலை மலையானே போற்றி போற்றி.3. செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி௿ செல்லாத செல்வ முடையாய் போற்றி௿ ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி௿ ஆகாச வண்ண முடியாய் போற்றி௿ வெய்யாய் தணியா யணியாய் போற்றி௿ வேளாத வேள்வி யுடையாய் போற்றி௿ கையார் தழலார் விடங்கா போற்றி௿ கயிலை மலையானே போற்றி போற்றி.4. ஆட்சி யுலகை யுடையாய் போற்றி௿ அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி௿ சூட்சி சிறிது மிலாதாய் போற்றி௿ சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி௿ மாட்சி பெரிது முடையாய் போற்றி௿ மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி௿ காட்சி பெரிது மரியாய் போற்றி௿ கயிலை மலையானே போற்றி போற்றி.5. முன்னியா நின்ற முதல்வா போற்றி௿ மூவாத மேனி யுடையாய் போற்றி௿ என்னியா யெந்தை பிரானே போற்றி௿ ஏழி னிசையே யுகப்பாய் போற்றி௿ மன்னிய மங்கை மணாளா போற்றி௿ மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி௿ கன்னியார் கங்கைத் தலைவா போற்றி௿ கயிலை மலையானே போற்றி போற்றி.6. உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி௿ உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி௿ எரியாய தெய்வச் சுடரே போற்றி௿ ஏசுமா முண்டி யுடையாய் போற்றி௿ அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றி௿ அறிவே அடக்க முடையாய் போற்றி௿ கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி௿ கயிலை மலையானே போற்றி போற்றி.7. எண்மேலும் எண்ண முடையாய் போற்றி௿ ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி௿ பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி௿ பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி௿ விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி௿ மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி௿ கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி௿ கயிலை மலையானே போற்றி போற்றி.8. முடியார் சடையின் மதியாய் போற்றி௿ முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி௿ துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி௿ சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி௿ அடியா ரடிமை அறிவாய் போற்றி௿ அமரர் பதியாள வைத்தாய் போற்றி௿ கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி௿ கயிலை மலையானே போற்றி போற்றி.9. போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி௿ புண்ணியனே நண்ண லரியாய் போற்றி௿ ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி௿ எண்ணா யிரநூறு பேராய் போற்றி௿ நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி௿ நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி௿ காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி௿ கயிலை மலையானே போற்றி போற்றி.10. இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
பகிர்