பாடல் 205 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 205 · சுவாமி மலை

தனதன தனந்த தான தனதன தனந்த தானதனதன தனந்த தான ...... தனதானஇருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயினிருவினை யிடைந்து போக ...... மல்முடவிருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேதமிலையென இரண்டு பேரு ...... மழகானபரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்பணியவிண் மடந்தை பாத ...... மலர்தூவப்பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாடபருமயி லுடன்கு லாவி ...... வரவேணும்அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்அடியென விளங்கி யாடு ...... நடராஜன்அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்அயலணி சிவன்பு ராரி ...... யருள்சேயேமருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவிமறலியுண வென்ற வேலை ...... யுடையோனேவளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமிமலைமிசை விளங்கு தேவர் ...... பெருமாளே.
பகிர்
கதை

சுவாமி மலை

சுவாமி மலை · ராகம் அடாணா · தாளம் அங்கதாளம் (5 1/2)

A story

Swamimalai · ragam அடாணா · thalam அங்கதாளம் (5 1/2)