சுவாமி மலை
சுவாமி மலை · ராகம் மோஹனம் · தாளம் திஸ்ர்ருபகம் (5)
தனாதனன தானம் தனாதனன தானம்தனாதனன தானம் ...... தனதானகடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்கடாவினிக ராகுஞ் ...... சமனாருங்கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்கனாவில்விளை யாடுங் ...... கதைபோலும்இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்கிராமலுயிர் கோலிங் ...... கிதமாகும்இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்றியானுமுனை யோதும் ...... படிபாராய்விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்வியாகரண ஈசன் ...... பெருவாழ்வேவிகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்விநாசமுற வேலங் ...... கெறிவோனேதொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்சுவாசமது தானைம் ...... புலனோடுஞ்சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
சுவாமி மலை · ராகம் மோஹனம் · தாளம் திஸ்ர்ருபகம் (5)
Swamimalai · ragam மோஹனம் · thalam திஸ்ர்ருபகம் (5)